இலங்கை

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அவிசாவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரையில் ஏக மனதாக ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியவில்லை. எவ்வாறாயினும் எந்தவொரு கட்சி போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனவால் அதனை தோற்கடிக்க கூடிய வல்லமை உள்ளது. இலங்கை மக்களை வேறொரு நாட்டிற்கு அடிமையாக்க வேண்டிய அவசியமில்லை.” என்றுள்ளார்.