இலங்கை

“நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை போல், கம்பீரமாகவும் அழகாகவும் யாழ். மாநகர சபைக் கட்டிடமும் எழுந்து நிற்கும், அவ்வாறு கட்டியெழுப்புவோம்.” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

யாழ். மாநகர சபைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது, எப்பொழுது நிதி ஒதுக்கப் போகிறீர்கள் எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள் என எந்த சந்தர்ப்பத்திலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்.

என்னிடம் கேட்பார், அமைச்சிடம் கேட்பார், இப்படியாக யாழ். மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும். இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும். கை கொடுத்துக் கொள்ள வேண்டியவர்.

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம். அதையும் பூர்த்தி செய்வோம். நெடுந்தூர பஸ் நிலைய கட்டடம் அமைக்கப்படுகிறது. அதனையும் பூர்த்தி செய்வோம். அது நிறைவுறும் தறுவாயில் உள்ளது.

பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அதை நாம் அபிருத்தி செய்து வருகின்றோம். முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும். சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக் கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக் கொள்வதற்கு என்ன செய்யவேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிருத்தி செய்துவருகிறோம். அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

கிளிநொச்சி, பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். இதுவொரு பரிய திட்டமாகும். வர்த்தகம் தொழிற் முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம். இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.