இலங்கை

“நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் என்னிம் உள்ளது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்கப் போவதில்லை.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டம் கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டை முன்னேற்றும் செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் என்னிடமுண்டு. பொதுமக்கள் வயிற்றுப்பசி இல்லாமல் வாழ்க்கைச் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டும். அதேபோல், நாட்டின் வருமானம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் பயனளிப்பதாக இருக்க கூடாது. சாதாரண மக்கள் கைகளில் நாட்டின் வருமானம் சென்றடைய வேண்டும்.

என்னை பற்றி சிலர் தவறான் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் 10 முறை என்னை பிரதமராக பதவியேற்று கொள்ளுமாறு கூறிய போதும், 52 நாள் அரசாங்கத்தில் 60 முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் நான் அதனை ஏற்கவில்லை. பின்கதவால் பதவியேற்கத் நான் ஒருபோதும் தயாரில்லை.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க வேண்டுமெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினேன். அதனால் சூழ்ச்சிகளால் அரசியல் செய்யப்போவதில்லை. சிலரால் எனது நேர்மையை பொறுத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. நான் பிறந்த நாள் முதல் தந்தையின் பழக்கம் எனக்கு தொற்றிக்கொண்டது. அதனால் செல்வந்தர்கள் என்னை எதிர்த்தாலும் சாதாரண மக்கள் என்னை ஏற்றுகொள்வர்கள்.

பின்கதவால் பதவி வகிக்க விரும்பாத நான் வெற்றிபெற்ற பின்பும் அரச மாளிகைகளில் குடியிருக்க போவதில்லை. பொது மக்களுடன் வீதியிலேயே இருப்பேன். அதேபோல் எந்த மோசடியும் இல்லாத என்னை வேட்பாளராக களமிறக்க தயங்குவதன் நோக்கம் எனக்கு புரியவில்லை. 71 முறை எமது தலைவரை காப்பாற்றிய எனக்கு கட்சி மீது அந்த பற்று உள்ளது. அவ்வாறிருக்க என்னை வேட்பாளராக அறிவிக்க எவ்வளவு தயங்கினாலும் ஒரு அடியேனும் பின்வாங்கபோவதில்லை.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.