இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 20ஆம் திகதி சாட்சியமளிக்கவுள்ளார். 

அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சாட்சியமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்துள்ளார். இதேவேளை விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை 2 வாரங்களினால் நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்காக சபாநாயகரினால் கடந்த மே மாதம் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.இதன் முதலாவது அமர்வு மே 29ஆம் திகதி இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பொதுநிர்வாக அமைச்சுக்களின் தற்போதைய மற்றும் முன்னாள் செயலாளர்கள், இராணுவ தளபதி, புலனாய்வு பிரதானிகள், முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மேல் மாகாண முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி உட்பட பலர் கடந்த 3 மாத காலமாக இங்கு சாட்சியமளித்தார்கள்.

ஜனாதிபதியையும் சாட்சி விசாரணைக்கு அழைக்க தெரிவுக்குழு முடிவு செய்திருந்ததோடு இதற்காக அவருக்கு அண்மையில் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை நேரில் சென்று சந்தித்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 20ஆம் திகதி சாட்சியமளிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். இதேவேளை தெரிவுக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அதன் அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை கையளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறிய பிரத சபாநாயகர், அன்றைய தினம் ஜனாதிபதி சாட்சியமளிக்க இருப்பதால் அடுத்த மாத முதற்பகுதியிலே சபாநாயகரிடம் அறிக்கை கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் சாட்சியத்தையும் உள்ளடக்கி முழுமையான அறிக்கையொன்றை கையளிப்பதற்காக மேலும் இரு வார கால அவகாசம் கோர இருப்பதாக கூறிய அவர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதற்கு பாராளுமன்ற அனுமதி பெற எதிர்பார்பதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, ஆசு மாரசிங்க, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் அங்கம் வகிப்பதோடு இவர்களும் தெரிவுக்குழு அதிகாரிகளும் 20ஆம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல உள்ளனர். அங்கு தெரிவுக்குழு கூட்டத்தை ஒருநாள் மாத்திரம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ´மக்களே முதன்மையானவர்கள்´ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.

புதன்கிழமை விண்ணில் உள்ள ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நாசாவின் இரு வீரர்களை ஏந்தியவாறு SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் Crew Dragon என்ற அதிநவீன விண் ஓடம் செலுத்தப் படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கால நிலை சீர்கேட்டால் இதன் பயணம் சனிக்கிழமை ஒத்திப் போடப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.