இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் முகமாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நாளை செவ்வாய்க்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தையோன்று இடம்பெறவுள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த போதிலும், சஜித் பிரேமதாச ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றவேண்டி இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற வேண்டுமென கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நேற்று காலை 09.00 மணிக்கு குறித்த பேச்சுவாத்தையை அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பின்புலத்திலேயே திடீரென பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

“எனினும் திட்டமிட்டப்படி நாளை பேச்சுவார்த்தை நடைபெறும். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும்” என சஜித் பிரேமதாசவின் ஆதரவு தரப்பினர் கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு ஐ.தே.மு சார்பில் நிறுத்தும் வேட்பாளர் தொடர்பில் கடந்த சில வாரங்களாக இழுபறி நிலை காணப்படுவதோடு சஜித் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடுபூராவும் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.