இலங்கை
Typography

மொட்டுச் சின்னத்தைத் தவிர்ந்து வேறு எந்த சின்னத்திலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

குருணாகல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடையும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மொட்டு சின்னத்திற்கு தன்னால் ஆதரவளிக்க முடியாது என்று தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்