இலங்கை
Typography

இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியாக சித்தரித்து வருவதாக பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

“நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை. மேற்குல நாடுகளுக்கும், கூட்டமைப்பினருக்கும் தான் பிரச்சினை இருப்பதாக கூறி வருகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வாக பல்வேறு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவியபோதே, உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இருப்பதாக கூறுவதே அப்பட்டமான பொய்யாகும். நாடளாவிய ரீதியில் மூவின சமூகத்தினரும் ஒற்றுமையுடனேயே இருக்கின்றார்கள். பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டதன் பின்னர் அமையப்பெற்ற மாகாண சபையை உரிய முறையில் பயன்படுத்தி மக்கள் சேவையை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு முன்னெடுத்திருந்தால் இரண்டு வருடங்களாக அம்மாகாண சபை செயலற்றிருக்கையில் மக்கள் வீதிக்கிறங்கி மாகாண சபை கோரி போராடியிருப்பார்கள். அவ்வாறு நடைபெறவில்லை. அதன்மூலம் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை என்பதே வெளிப்படுகின்றது. கூட்டமைப்பினருக்கே அதிரிகாரப்பகிர்வு அவசியமாகின்றது. அந்தக் கோரிக்கை கூட தமது அரசியலை மேற்கொள்வதற்கே அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS