இலங்கை

நாட்டின் அனைத்து இன மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் வல்லமை தமக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பந்தை ஒவ்வொரு பக்கமாக மாற்றி மாற்றி காலத்தை வீணடிக்காமல், அனைத்து இன, மத தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வு திட்டத்தை தென்பகுதி சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கும் வேட்பாளருக்கே தமது ஆதரவு கிடைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறித்து, கொழும்பு ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பிளவுபடாத நாட்டில், அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவதென்பதே, 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது, முன்வைக்கப்பட்ட யோசனை ஆகும். இது தமிழர் தரப்பிற்கும், தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, அப்போதைய நிலைப்பாடே, தற்போதும் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைற்ற என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சிக்கு நேற்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச, குறித்த ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்போதே, அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “சகல மக்களும், யாழ்ப்பாண மக்கள் மாத்திரமன்றி, நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டுமென்பதே எனது எண்ணமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயக கட்சி அதில் கருத்து மோதல்கள் காத்திரமாக அணுகப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட தரப்பினரோ, அல்லது தனி நபரோ எடுக்கின்ற தீர்மானத்திற்கு, கட்டுப்படும் நிலமை ஐக்கிய தேசிய கட்சியில் கிடையாது. கட்சி ஜனநாயகத்தை மறுக்கின்றவர்கள் அல்லது ஜனநாயகத்திற்கு மாறாக செயற்படுகின்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்கள் காணப்படுகின்றதாக பிரசாரம் செய்கின்றனர்.” என்றுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.