இலங்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழர்கள் தோற்கடித்தே ஆகவேண்டும்.” என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அநுர குமார திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பது உறுதியாகிவிட்டது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கதான் என்பது அவரின் வாயில் இருந்து வெளிவரும் கருத்துக்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்துக் களமிறங்கவுள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார்.

இந்த மூன்று கட்சிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். சிங்கள மக்கள் இவர்கள் மூவரையும் நிராகரித்து ‘தேசிய மக்கள் சக்தி’க்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் தமிழ் மக்களிடம் இந்த வேண்டுகோளை நான் விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.