இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்றும்வரும் கூட்டணிப் பேச்சுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுவரும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. சின்னம் என்பது ஒரு பிரச்சினையில்லை. அதனை வைத்து போலி பிரச்சினையை சிலர் உருவாக்க முற்படுகின்றனர். சிலருக்கு பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் இல்லை. சுதந்திரக் கட்சியைப் படுகுழியில் தள்ளி அதன் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அவர்களால் பயணிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்தமையால்தான் சுதந்திரக் கட்சி நாசமடைந்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைய முற்பட்டால் அவர்களுக்கு எதிர்காலமில்லை. சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பொதுஜன பெரமுனவில்தான் உள்ளது. தேர்தலுக்காக நாம் அமைக்கவுள்ள கூட்டணியின் பிரதான பதவிகளில் ஒன்றை சுதந்திரக் கட்சிக்கு வழங்க ஆலோசித்து வருகின்றோம்.

சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாப்பதில் உறுதியாகவுள்ளோம். ஆனால், கூட்டணிப் பேச்சுகளில் குழப்பம் ஏற்படும் வகையில் தயாசிறி போன்றோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தனிப்பட்ட அரசியல் நிழகழ்ச்சி நிரலின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளாரா எனத் தெரியவில்லை.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“உலகின் பல நாடுகளும் பின்பற்றும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கோருகிறோம். அதனை யாரும் மறுக்க முடியும் என நான் நினைக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது. 

மத்திய பிரதேசத்தை பாஜகவிடம் இழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் அன்ஹுய் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக யாங்சி நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.