இலங்கை

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி எனக்கு வழங்கப்பட்டால், கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்ரமசிங்க கடமையாற்றுவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுப்பதாக பிரதமரிடம் எடுத்துரைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சஜித் பிரேமதாசவுக்கு ஜனதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படாமை குறித்து ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பியதற்கு பௌத்த மத கோட்பாடுகளை மையப்படுத்தியே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் இரவு 09.30 க்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் குறித்த இருவரையும் தவிர அமைச்சர்களான கபீர் ஹசீம், மலிக் சமரவிக்ரம, ராஜித சேனரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணித்தியாலமக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசாங்கத்துடன் இணைந்துள்ள மேலும் சில கட்சிகளின் ஆதரவையும் பெற்றால் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை தெரிவித்துள்ளார். அத்துடன், இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.