இலங்கை

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத் தலையீடு வருத்தமளிப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அசீஸ் தெரிவித்துள்ளார். 

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, இலங்கை அரச தலைவரின் இறையாண்மை தீர்மானம் என அது தொடர்பில் குற்றம் சுமத்தும் சர்வதேச தரப்பு கருத்திற் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 42வது அமர்வின் பொது விவாதத்தில் கருத்து தெரிவித்த போது ஏ.எல்.ஏ.அசீஸ் இதனைக் கூறியுள்ளார்.

“இலங்கையின் உள்நாட்டு நிர்வாக செயற்பாடுகளில் பல்வேறு சர்வதேச தரப்பினர் தமது அறிவிப்புக்களை மற்றும் நிலைப்பாடுகளை தெரிவித்து வருவதானது மிகவும் வருத்தத்திற்க உரியதாகும். அது, இயற்கை நீதி மற்றும் கொள்கைகளுக்கு முரணானது. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.