இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும், அடுத்துவரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிபெறச் செய்ய கட்சியின் வாக்குகளை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்து தீர்மானம் எடுக்கின்றது. அத்துடன் மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் நோக்குடனே பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறான நடவடிக்கைகள் எனது கொள்கைக்கு பொருந்தாது. அதனால் அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு நான் ஒருபோதும் கலந்துகொள்ளப்போவதில்லை.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.