இலங்கை

எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முழுக் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு கோரி தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்களிப்பையும் உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றை மூடியும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் மீனவர்கள் தமது தொழிலுக்குச் செல்லாதும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை, அத்தியாவசிய அவசர தேவை நிமித்தம் பயணிப்பவர்களதும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று திரும்புபவர்களினதும் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலான மருந்தகங்கள், வண்டி வாகன திருத்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவை வழமைபோன்று இயங்குவது அவசியமென்றும் அந்த பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்றும் தமிழ் மக்கள் பேரவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.