இலங்கை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கினாலும், இந்தியாவின் பங்களிப்பு என்பது அதிமுக்கியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஆனாலும், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.