இலங்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதுவே, வெற்றிகரமான சின்னம்.” என்று கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரால் ஒருபோதும் இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை அக்கட்சியினர் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதை விரும்பாத பலர், ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, மொட்டுச் சின்னத்திலன்றி வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று, 13வது அரசியலமைப்புத் திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் சில திருத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.