இலங்கை

“போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் இன்று அரச உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கான உரிமையோ விடுதலையோ இதுவரை கிடைக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலக திறப்பு விழாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள். அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள். நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்துவருகிறோம்.

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் உயர் பதவிகளில் உள்ளார்கள். ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகிறார்கள். ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தேர்தலின் போது இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதேநேரம் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.