இலங்கை

வடக்கு மாகாணத்தில் இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. 

அதன் ஒரு கட்டமாக காணிகளை மீள் உரிமை கோரும் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஆளுநரினால் யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுக் கொண்டிருக்கின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் np.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ´காணி கோரல் ´ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்றுள்ளது.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.