இலங்கை
Typography

“ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை, முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுகொள்ளுமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவித்தமைக்கு அமைய அவர், பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ்- முஸ்லிம் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தமக்கான ஆதரவை திரட்டி வருகின்றார்.

இந்நிலையில், சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து வினவியா போதே, சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்