இலங்கை

தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றறில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பித்தது. 

சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ள எழுக தமிழ் பேரணி, யாழ். முற்றவெளியை நோக்கி பயணிக்கிறது. அங்கு, பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.