இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அதாவது 2012ஆம் ஆண்டு தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி தொடர்பாக தற்போது எந்த தகவல்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு நிதி மோசடி மற்றும் ஊழல் என்ற தலைப்பில் பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “தாமரைக் கோபுரமானது, நிர்மாணிப்பு யுகத்தில் எமக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நாம் கருதுகிறோம். இது இலங்கையின் மிக முக்கியமான ஒரு சின்னமாக மாற்றமடைந்துள்ளது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாவும், இது எமக்கான பெருமையைத் தேடித்தந்துள்ளது. தாமரைக் கோபுரத்தின் நிர்மாணிப்புப் பணிகளுக்காக 7 வருடங்கள் தேவைப்பட்டன.

2012ஆம் ஆண்டுதான் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நிதி எமக்கு சீனாவிலிருந்து எக்ஸிம் வங்கி ஊடாக கடனுதவியாக வழங்கப்பட்டது. இதற்காக எமது அரசாங்கமும் ஐந்து தரப்பினருடன் உடன்படிக்கையியை செய்துக்கொண்டது. இந்த நிர்மாணிப்பு தொடர்பாக இலங்கையர் என்ற ரீதியில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

2012ஆம் ஆண்டு இதன் அடித்தளம் அமைப்பற்காக 200 கோடி ரூபாய், அலிப் என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் சிறிது காலத்தில் காணாமல் போய்விட்டது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 200 கோடி ரூபாயும் எங்கு சென்றது என்று தெரியவில்லை. இது தொடர்பாக நாம் விசாரணைகளையும் மேற்கொண்டோம். இறுதியில் அந்த நிறுவனம் எங்கு சென்றது என்பது இதுவரை தெரியாதுள்ளது.

இதனையடுத்து எமது மக்களின் பணத்தில் இந்த கோபுரத்தை அமைக்க நாம் தீர்மானித்துள்ளோம். மேலும், இதன் நிர்மாணிப்புப் பணிகளை முழுமைப்படுத்த இன்னும் 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவ்வாறான எமது நாட்டின் இந்த தேசிய சொத்தை நாம் பாதுகாக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.”என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.