இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனநாயக ரீதியில் கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பிலுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு, கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி தீர்வுகாண வேண்டும். அதனை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும். அத்துடன், இது தொடர்பான கடிதம் ஒன்றையும் நான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளேன். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் எனக்கு உள்ளது. அதற்கான மக்கள் ஆணை எனக்கு இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நான் களமிறங்க வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்