இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் சட்டத்துக்கு இணங்க பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது செயற்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ரஸிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியார் மற்றும் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தேர்தல் தொடர்பான காட்சிப்படுத்தல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

அதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டு ஓரிரு தினங்களில் அதனை கட்சிகளுக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதேச, மாவட்ட ரீதியான பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன. தேர்தல் காலங்களில் வன்முறைகளைத் தவிர்ப்பது பொலித்தீன் பாவனைகளை தவிர்ப்பது போன்ற விடயங்களும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு, கிழக்கின் தனித்துவங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்கிற போதிலும், மக்கள் வழங்கிய தீர்ப்பினை மதிக்க வேண்டியது கடமையாகும் என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.