இலங்கை
Typography

அறிவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது நாட்டின் அபிவிருத்தி வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவாலாகும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பொறியியல் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு பேசுகையில்; அறிவியலளார்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும், அதேபோல் வெளியேயுள்ள நிபுணர்களை நாட்டிற்கு அழைக்கவேண்டும் இதற்கான பொறிமுறை அவசியமானது.

இங்கு அவர்களுக்கான பணிகளில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் வெளியேறுவது என்பது நாட்டின் வளர்ச்சிகுப் பாதகமானது. ஆதலால் அறியலாளர்களின் சேவை நாட்டிற்கு முழுமையாகக் கிடைப்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்படல் வேண்டும். அது அவர்களது திறமைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நற்பயன் தரும் எனத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்