இலங்கை

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார். 

எனினும், எழுத்துமூலமாக வாக்குறுதிகள் சிலவற்றை சஜித் பிரேமதாசவிடம் கோருவதற்கு ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

அதன்பிரகாரம்,

1. 2024ஆம் ஆண்டு வரையில் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பதற்கு உடன்பட வேண்டும்.
2. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால், ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்.
3. நல்லிணக்க அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான பணிகளை நிறைவு செய்து, நிறைவேற்ற வேண்டும்.

ஆகிய விடயங்களையே, எழுத்துமூலமாக ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவிடம் கோரியுள்ளார். எனினும், தான் வாக்குறுதி அளிக்கும் விடயங்கள் தொடர்பில் தன்னிடம் உறுதிப்பாடு உள்ளதாகவும், அதனை எழுத்து வடிவில் தர வேண்டிய தேவை இல்லை என்றும் சஜித் பிரேமதாச சிரேஷ்ட அமைச்சர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.