இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையுடன் வெற்றிபெற்று நாட்டின் இறைமையைப் பலப்படுத்துவேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“தேசிய பாதுகாப்பினை முதலில் பலப்படுத்த வேண்டும். தோன்றவுள்ள எமது ஆட்சியில் தீவிரவாதம் தழைத்தோங்குவதற்கு ஒருபோதும் இடம் கிடையாது. ஆட்சியதிகாரத்தை பெற்றவுடன் சர்வதேசத்தின் மத்தியில் இராணுவத்தினருக்கு உள்ள தடைகள் அனைத்தையும் தகர்தெறிந்து நாட்டின் இறையாண்மையினை பலப்படுத்துவேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற இராணுத்தினர்களது தேசிய மாநாடு கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.