இலங்கை
Typography

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

“கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்று அவரது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். அதனால்தான், அவர் ஊடக சந்திப்புக்களைத் தவிர்த்து வருகிறார்.” என்று கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்