இலங்கை
Typography

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், பொது வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிட வேண்டும் என்று தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆனாலும், அதற்கு சம்பந்தன் எந்தவிதமான இணக்கப்பாட்டினையும் வெளியிடவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம் வெளியிட்டு, அதற்காக அரசியல் கட்சிகளைச் சந்தித்து வருகின்றது. அதன் ஒருகட்டமாக இரா.சம்பந்தனுக்கும், பேரவையின் சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போதே, இரா.சம்பந்தனை தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்பிலும் சிவில் பிரதிநிதிகள் நேற்று கலந்து கொண்டனர். இதன்போது, பொது வேட்பாளர் குறித்த கோரிக்கையை, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரவையின் சிவில் பிரதிநிதிகள், இன்று வியாழக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்