இலங்கை
Typography

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் நியமனத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது மாநாடு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பிலான முன்மொழிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிய, பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் வழிமொழிந்தார். இதனை, மாநாட்டில் பங்குபற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனமாக ஏற்றுக்கொண்டனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது மாநாட்டிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52 நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது, பாராளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்காக பணிகள் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பழிவாங்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உள்ளிட்ட ஜ.தே.க முக்கியஸ்தர்களும், பெருமளவில் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்