இலங்கை
Typography

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் போட்டியிடுவதில் சட்டரீதியான தடைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைய வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ தவிர்ந்த மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS