இலங்கை
Typography

“எமது அரசாங்கத்தில் குடும்ப ஆட்சியை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். எனது தந்தையின் வழியிலே எனது பயணத்தை மேற்கொள்வேன்.” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“நாட்டுக்கு பொருத்தமில்லாத, பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்திலும் நானோ ஐக்கிய தேசிய கட்சியோ கைச்சாத்திடப்போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சமூக உடன்படிக்கைக்கு சென்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1993இல் எனது தந்தை ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த பின்னர் அந்த பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சி 2019இல் எனக்கு வழங்கி இருக்கின்றது. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை எனது உயிருக்கும் மேலாக கருதி நிறைவேற்ற பாடுபடுவேன்.

நான் இந்த இடத்துக்குவர கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விட்டுக்கொடுப்பும் பொறுமையுமே காரணமாகும். அவரின் இந்த தியாகத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதேபோன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தியாகத்தையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் மக்களின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானவுடன் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தியில் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்