இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது. 

காலி முன்னாள் நகர மேயர் மெத்சிறி டி சில்வா இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது அடுத்துவரும் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும், அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் 5 வருடங்கள் நிறைவடைந்ததும், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அரிவித்தலை பிறப்பித்து, எதிர்வரும் 07ஆம் திகதி வேட்பு மனுவும் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை என்று தெரிவித்து உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS