இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை கேள்விக்குள்ளாக்கி தொடரப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. 

அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு இலங்கைப் பிரஜாவுரிமையை மீளப்பெற்றமை சட்டரீதியான நடைமுறைகளுக்கு அப்பாலானது என்று தெரிவித்து, அண்மையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பே சற்றுமுன்னர் வெளியாகியிருந்தது.

இதன்மூலம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் ஏற்பட்ட தடை விலகியுள்ளது.