இலங்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு நீதித்துறையை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டமைக்கு தலை வணங்குகின்றோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்லேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஜெப்ரி தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான இந்த வழக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு கூட பொறுத்தமற்றது என்ற வகையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

உதய கம்பன்பில தெரிவிக்கையில், “இன்றைய தீர்ப்பின் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது” என்றார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், “மிகவும் சாதாரணமான முறையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பிற்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.

டலஸ் அழகப் பெரும தெரிவிக்கையில், “முழு நாடும் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுவே இறுதி தீர்ப்பு” என்றார்.

மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில், “நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்தாயிற்று“ என்றார்.

நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில், “நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகள் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.

விமல் வீரவன்ச தெரிவிக்கையில், “கோட்டாபய ராஜபக்ஷவுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் நீதித்துறையை பயன்படுத்தி அவரை வீழ்த்த நினைத்தார்கள். அவ்வாறானவர்களின் தோல்வி இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது” என்றார்.

“தமிழ் மக்கள் ஒரு தேசத்துக்கான உரிமையைக் கொண்டவர்கள். அதனாலேயே, தம்மைத்தாமே ஆளும் உரிமைக் கோரி போராடுகிறார்கள்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கொழும்பு நகரிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள டெல்லி முழுவதையும் தனிமைப்படுத்தும் வகையில், அதன் அனைத்த எல்லைகளையும் மூடுவதற்கு உத்தரிவிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந் கெஜ்ரிவால். வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தவும், அவதானிக்கவும், வேண்டி இந்த முடிவு எடுக்கபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த " காட்மேன்" இணையத் தொடர் மீதாக மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் கருப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை போலிசார் வேண்டுமேன்றே சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளத்தில் வெளியானதில் இருந்து இன்று வரை அங்கு கருப்பின, சிறுபான்மை இன மக்களால் முன்னெடுக்கப் பட்ட ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளது.

சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க மண்ணில் இருந்து வெற்றிகரமாக நாசா மற்றும் தனியார் விண்வெளி ஓட ராக்கெட்டு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை இணைந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் Crew Dragon என்ற ஓடத்தை பூமிக்கு மேலே விண்ணில் சுற்றி வரும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு அனுப்பியுள்ளன.