இலங்கை

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தரும், முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தினார். 

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவது என்று எடுத்த முடிவுகளை அடுத்தே, சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.