இலங்கை
Typography

நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப ஆட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“இனவாதிகளினால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. கடந்த அரசாங்கத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ராஜபக்ஷக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. திறமைகளின் அடிப்படையில் பதவிகள் எவருக்கும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இன்று அவர்களே ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருத்துரைக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது . இதுவே என்றும் தொடரும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம் பெற்றது. அங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS