இலங்கை
Typography

“முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கம் பெரும் தொகை நிதியை செலவிடுகிறது. நான் ஜனாதிபதியானால், இவ்வாறான செலவீனத்தைக் கட்டுப்படுத்துவேன்.” என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,பொது மக்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களது பாரியார்களினது பராமரிப்பு செலவுகளுக்காக பொது மக்களின் பணமே செலவிடப்படுகிறது. இதற்காக பாரிய தொகை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்றது.

பிரேமதாசவின் மனைவி,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,மஹிந்த ராஜபக்ஷ போன்றோருக்காக பெருமளவு நிதி விரயமாக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வருமான வழிகள் இருக்கின்றன. அதற்கு மேலாக அவர்களை கவனிக்க அவர்களின் பிள்ளைகள் இரு க்கிறார்கள். இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்க பொது மக்களின் பணம் செலவிடப்படுவது அவசியமற்றது.

சிலவேளை அவர்களுக்கு வருமானம் பெறும் எந்த வழியும் இல்லாமல், அவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டிருந்தால் மாத்திரம் அவர்களை கவனிக்க சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக குறிப்பிட்ட ஒரு தொகையை உதவுத்தொகையாக வழங்க முடியும். அதனை தவிர வேறு அனைத்து உதவுத் தொகைகளும் இரத்துச் செய்யப்பட வேண்டும். மேலிடத்தில் இருந்து தான் நாட்டை சீர்செய்வதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்