இலங்கை

தமக்கு கிடைத்த சில தகவல்களுக்கமைய மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளதாக கத்தோரிக்கப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

தாம் ஜனாதிபதிக்கு கடிதமூலம் அதனை அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அதனை வைத்துக்கொண்டு சிலர் தமது பெயரை விமர்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலமென்பதால் அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கிடையில் பிளவுகளையேற்படுத்த சிலர் முயற்சிக்கலாம். அதேபோன்று இதன் பின்னணியில் சர்வதேச செயற்பாடுகளும் இருப்பதாக அறிய முடிகிறது. எவ்வாறெனினும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லை என புலனாய்வு பிரிவு தமக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எவ்வாறெனினும் இந்த வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கிணங்க இனம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு, 20வது திருத்தச் சட்டமூலத்திலும் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.