இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை வியாழக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் யாரையும் முன்னிறுத்தாத சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை நிபந்தனைகள் ஏதுமின்றி ஆதரிப்பதாக இன்று புதன்கிழமை அறிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.