இலங்கை

“ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றதும், 17ஆம் திகதி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் விடுவிக்கப்படுவார்கள்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அத்தோடு, ஜனாதிபதியாக பதவியேற்று ஆறுமாத காலத்துக்குள் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச்செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2005ஆம் ஆண்டுக்கு முன்னர் வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை மூவின மக்களும் சுதந்திரமாக பயணிக்கும் சந்தர்ப்பதை ‘மிலிட்டிரிகாரன்’ என இந்த அரசாங்கத்தால் விமர்சிக்கப்படும் நானே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முடித்து வைத்தேன்.”

எனது தந்தையும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் ஆரம்பித்த பயணத்தையே நாம் தொடர்கிறோம். எமது பயணத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்துக்காக அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

பௌத்த பூமியில் எமது பயணத்தை ஆரம்பித்துள்ளோம். தேர்தலின் இறுதியில் நாம் பெறும் வெற்றியானது அறுதிப் பெரும்பான்மையுடன் அதிவிசேட வெற்றியாக அமையும் என்பது உறுதியானதும் தெளிவானதுமாகும்.

அரசாங்கத்தின் பிரசார விளம்பரமொன்றில் ‘மிலிட்டிரிகாரன்’ ஒருவர் வருகிறார் எனக் கூறப்படுள்ளது. அத்துடன், ‘மிலிட்டிரிகாரன்’ அதிகாரத்துக்கு வந்தால் கழிவறைக்கும் சீருடையுடன்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென கூறுகின்றனர்.

இராணுவ வீரர், கடற்படை வீரர் என்று கூறிய யுகத்தை 2005ஆம் ஆண்டில் நாம் முடிவுக்கு கொண்டுவந்து இராணுவ வீரர்களின் சுபீட்சமான யுகமொன்றையே ஏற்படுத்தினோம்.

அத்தகைய இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் போர்க்குற்ற நீதிமன்றங்களுக்கு கொண்டுசெல்லவும் சிறையில் அடைக்கவும் முற்பட்டது. புலனாய்வுத்துறையை நாசமாக்கினர்.

2005ஆம் ஆண்டு நாட்டை மஹிந்த பொறுப்பேற்ற போது வவுனியாவுக்கு அப்பால், எவருக்கும் செல்ல முடியாத யுகமே இருந்தது. கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு பகுதி எம்மிடம் இருக்கவில்லை.

அவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்த நிலத்தை மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மீட்டெடுக்க ‘மிலிட்டிரி காரன்’ தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டான். இதை இந்த அரசாங்கத்துக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சியைப்பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் கூட செல்லாத நிலையில் எமது மக்கள் குண்டுத்தாக்குல் அச்சமின்றி விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பதை உருவாக்கியுள்ளனர். தேர்தல் முடிவடைந்து மறுதினம் 17ஆம் திகதி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்.

16ஆம் திகதி நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றும் போது நாட்டை மீண்டும் வளப்படுத்தும் எனது கடமை ஆரம்பமாகும். நாட்டில் நெல் விளைச்சல் குறைவடைந்துள்ளது. நெல்லுக்கு ஏற்ற விலை வழங்கப்படுவதில்லை. விவசாயமும் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பாரிய கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“உலகின் பல நாடுகளும் பின்பற்றும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கோருகிறோம். அதனை யாரும் மறுக்க முடியும் என நான் நினைக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது. 

மத்திய பிரதேசத்தை பாஜகவிடம் இழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் அன்ஹுய் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக யாங்சி நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.