இலங்கை

“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சி யாப்புக்கு இணங்க என்னை நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது. அதற்கான அதிகாரம் செயலாளருக்கோ, தவிசாளருக்கோ இல்லை.” என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தவுடனேயே கட்சியில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கட்சி உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் என்றும் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்திருந்தேன். அதையும் மீறி கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. எனினும் உத்தியோகபூர்வமாக எனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.

அதேவேளை எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்துக்கும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தியானந்தனினால் எனக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் என்னைக் கட்சியைவிட்டு விலக்கி விட்டதாக செயலாளரோ அல்லது தவிசாளரோ கூறியதாக செய்திகள் வெளிவருகின்றமை வியப்பாகவுள்ளது.

கட்சியின் யாப்பிற்கிணங்க நான் ஏதாவது குற்றம் இழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்ய முடியுமே தவிர அல்லது இடைநிறுத்த முடியுமே தவிர நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“உலகின் பல நாடுகளும் பின்பற்றும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கோருகிறோம். அதனை யாரும் மறுக்க முடியும் என நான் நினைக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது. 

மத்திய பிரதேசத்தை பாஜகவிடம் இழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் அன்ஹுய் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக யாங்சி நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.