இலங்கை

“தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். அதைவிடுத்து ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும்.” என்று புதிய ஜனநாயக முன்னணியின் (ஐக்கிய தேசிய முன்னணி) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய சிந்தனை கொண்ட சர்வதேசத்தை வெற்றிகொள்ளக்கூடிய ஜனநாயகமும் சகல மக்களின் நலன்சார்ந்த அரசாங்கத்தை உருவாக்கும் எமது பயணத்தில் இந்த நாட்டு மக்களின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் புதிய பயணம் ஒன்றினை உருவாக்க பங்களிப்பு வழங்கும் வேளையில் இந்த நாட்டில் பாகுபாடின்றி இந்த நாட்டில் சகல மக்களுக்கும் செய்நன்றியை வெளிப்படுத்துவேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது மக்களின் ஒட்டுமொத்த குரலுமாக நாம் வெற்றி பெறுவோம். இந்த புதிய யுகத்தில் புதிதாக சிந்திக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். உலகுடன் போட்டியிட்டு முதல்தர நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான புதிய சிந்தனை, புதிய தொழிநுட்பம், புதிய இலக்குகளுடன் நாம் முன்னோக்கி செல்லும் நாட்டினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை பலப்படுத்தும் நாடாகவும், உற்பத்திகளை உருவாக்கும் நாடாகவும், ஏற்றுமதி, இறக்குமதிகளை கொண்டு குறிப்பாக ஏற்றுமதியில் அதிக அக்கறை செலுத்தும் நாடாகவும், நாட்டுக்கு வளர்ச்சியை உருவாக்கி சரியான இடத்தை மக்களுக்கு கொடுக்கும் நாடாகவும் , சகல துறையுடனும் போட்டியிடும் விவசாய, மீனவ, நடுத்தர தொழிலாளர்களை பலப்படுத்தும் நாட்டினை நாம் உருவாக்குவோம்.

எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஒரு குடும்பத்தின் தீர்மானத்தை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. இந்த நாட்டுக்காக சிந்திக்கும் எமது இளம் சமூகம், நாட்டுக்காக வேலைசெய்யும் தொழிலாளர், பெண்கள் என அனைவரையும் சிந்தித்து அவர்களையே இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்க வேண்டும். அதை விருத்து ஒரு குடும்பம் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்கக்கூடாது.

இதுவரை காலமாக நாட்டில் இடம்பெறாத அபிவிருத்தியை எனது ஆட்சியில் செய்து முடிக்கவே நான் விரும்புகின்றேன். அதற்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்து வருகின்றேன். நாம் உருவாக்கும் புதிய இலங்கையில் ஊழல், மோசடிகள், குற்றங்கள் இருக்காது. அரச சொத்துக்களை சூறையாட இடமளிக்க மாட்டோம்.

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். அதை விடுத்து ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை என்ற கோசத்தை எமது ஆட்சியில் நாம் இல்லாது செய்வோம். மக்கள் எம்மை ஆட்சிக்கு கொண்டுவருவதே அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுகொடுபோம் என்ற நம்பிக்கையில் தான். அவ்வாறு இருக்கையில் உங்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தலைமைத்துவத்தை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.