இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன். பிரதானமான முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” என்றுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.