இலங்கை

“அரசியலமைப்பில் 16ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம், தமிழ் மொழி வடக்கு-கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி ஆகிவிட்ட விடயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், அதாவுல்லா போன்றோர் அவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“தமிழ் மொழி முழு இலங்கையின் இன்னொரு ஆட்சி மொழி என்பதையும், தமிழ் மொழி வடக்கு- கிழக்கின் நிர்வாக மொழி என்பதையும் இந்த தமிழில் பேசும் மூன்று கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு கூட்டு குடித்தன அரசியல்வாதிகளும் அறிவார்கள் என நம்புகிறேன். எங்களுக்கும் இது தெரியாதே என என் நம்பிக்கையில் மண்ணை போட்டு விடாதீர்களப்பா என இவர்களை வேண்டுகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்ட உரையாற்றிய போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் இன்றைய அரசியலமைப்பின்படி, இலங்கையின் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆகும். இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். சட்டப்படி சமமான ஆட்சி - தேசிய மொழிகள் என்பதற்காக, பெயர்பலகைகளில், ஒன்றின் மீது ஒன்றை எழுத முடியாது. ஆகவே வரிசையாக எழுத வேண்டும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த, ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்றும் எழுத வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பிரதேச செயலக பிரிவில் அந்த மாகாணத்தில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியை தவிர்ந்த அடுத்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்ந்தால், இந்த வரிசை மாறலாம். ஆனால் ஆங்கிலம் எப்போதும் மூன்றாம் இடத்திலேயே எழுதப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் மொழி தொடர்பான 4ஆம் அத்தியாயத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக மொழிகள்: 22. (1) இலங்கை முழுவதிலும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்த்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம், இலங்கையின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அரச பொது பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுவதற்காகவும், சிங்கள மொழி பயன்படுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்.

14/நவம்பர்/1987 அன்று 13ஆம் திருத்தம் மூலம் மாகாண சபைகளாக அதிகாரப்பகிர்வு வந்தது. 17/டிசம்பர்/1988 (என் பிறந்த நாள்!!) அன்று 16ஆம் திருத்தம் மூலம் இந்நாட்டில் தமிழும் ஆட்சி மொழி ஆகியது. இவை இரண்டும் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட புலிகளின் போராட்டமே மூல காரணம். துணை காரணம் இந்திய அரசு. இந்த இரண்டு அழுத்தங்கள் காரணமாக இவை நிகழ்ந்தன. பிறகு புலிகளும் இந்திய அரசும் தமக்குள் சண்டையிட்டு நாசமாக போனது பின்கதை.

இன்று, இந்த இரண்டு திருத்தங்களையும் காப்பாற்றி முன்-நகர்த்த எம்மால் முடியும். அதை நோக்கியே நான் சிந்திக்கிறேன். பேசுகிறேன். செயற்படுகிறேன். பயணிக்கிறேன். இந்த தெளிவு எனக்கு இருக்கிறது. இது நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். முக்கியமாக தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.