இலங்கை
Typography

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என் மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் மீறமாட்டேன்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சுதந்திரக் கட்சிக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சனிக்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. அங்கு கருத்து வெளியிடும் போதே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையில் அமையும் அரசாங்கத்தில் ஒருபோதும், சுதந்திரக் கட்சியுடன் உள்ள உறவினை ஒருபோதும் மீறப்போவதில்லை.

சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் தனித்துவம் தொடர்பில் எந்தவகையிலும் மக்கள் பிரச்சினையை ஏற்படுத்திகொள்ள அவசியமில்லை. சுதந்திரக் கட்சி முன்பு பல காரணங்களுக்காக சில முடிவுகளை எடுத்திருந்தாலும், தற்போது என்னுடன் இணைந்து செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்