இலங்கை

நிவாரணம் கோரிப் போராடிய மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் துப்பாக்கித் தோட்டாக்களால் பதிலளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெடி குண்டுகளை உணவாக உட்கொள்ள மீண்டும் வாய்ப்பளிப்பதா? அல்லது தற்போதுள்ள சூழலை போன்று சோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பளிப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

லக்கலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷ புதிய நாடு ஒன்றை உருவாக்க போவதாக கூறுகின்றார். சுமார் 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஷர்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது. ஆகவே தற்போது மீண்டும் புதிய நாட்டை உருவாக்க போவதாக கூறுவது எவ்வாறு?

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சி செய்த விதத்தை போன்றதொரு ஆட்சியை நடத்தவே அவர்கள் மீண்டும் அரசாங்கத்தை தருமாறு கேட்கினறனர். தமது முன்னைய 10 வருட ஆட்சியில் பொருட்கள் சேவைகளின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்காதவர்கள் தற்போது அவற்றை செய்வதாக கூறுவது எவ்வாறு?

தற்போதைய அரசாங்கம் 2015இல் ஆட்சிக்கு வந்தபோது பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 162 ரூபாவாக இருந்தது. அதேபோல் அன்று டீசல் லீட்டர் ஒன்றின் விலை 118 ரூபாவாக காணப்பட்டது. ஆனால் இன்று 104 ரூபா. அன்று மண்ணெண்ணை லீட்டர் ஒன்றின் விலை 110 ரூபா இன்று 90 ரூபாவாகும்.

அதேபோல் அன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2650 ரூபாவாக காணப்பட்டது. இன்று அதன் விலை 1493 ரூபா, அன்று பருப்பு ஒரு கிலோ 240 ரூபாவாக இருந்ததுடன் இன்று 120 ரூபாவாக அது குறைந்துள்ளது. அதேபோல் அன்று 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 410 ரூபாவாக காணப்பட்டது இன்று 345 ரூபாவாக குறைந்துள்ளது. சீனி அன்று 120 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 100 ரூபாவாகும். டின் மீன் அன்று 275 ரூபாவாக காணப்பட்டதுடன் இன்று அதன் விலை 190 ரூபாவாக காணப்படுகின்றது.

ராஜபக்ஷ அரசாங்கம் அன்று எரிப்பொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சிலாபம் அந்தோனி என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தது. சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ரொசேன் சானக்க மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி அவரை கொலை செய்தனர். அதேபோல் குடி நீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

அதற்கு பதிலாக 2015ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சுதந்தரம் வழங்கினோம். அன்று துப்பாக்கி சூட்டை உட்கொண்டதற்கு பதிலாக நாம் சோறு உண்ணும் யுகத்தை ஏற்படுத்தினோம். அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெடி குண்டுகளை உணவாக உட்கொள்ள மீண்டும் வாய்பளிப்பதா? அல்லது தற்போதுள்ள சூழலை போன்று சோறு சாப்பிடுவதற்கு வாய்பளிப்பதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். சோறு சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.