இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு கிளை மாத்திரமே என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், “சில விடயங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலகிய பின்னர், அதனுடன் இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.” என்றுள்ளார்.