இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேரக தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் ஆதரவளர்களினால் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்த விடயம் குறித்து அந்த கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்வு வழங்கப்படும் வரை என்னால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.

சுதந்திரக் கட்சியின் தனித்துவத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பொதுஜன பெரமுனவுடனும் கோட்டாவுடனும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலமாகவே நாம் அவருக்கு ஆதரவளித்துள்ளோம். ஆகவே இவ்வாறான அதிருப்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டியவையாகும்.” என்றுள்ளார்.