இலங்கை

முல்லைதீவு, செம்மலை- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் சடலத்தை எரியூட்டிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சாந்தி சிறீஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள குறித்த வழக்கில், மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முதன்மைச் சட்டத்தரணியாக ஆஜராகியுள்ளார்.

இதன்போது, ஞானசார தேரர் உட்பட மூன்று எதிர்மனுதரார்களுக்கும் நீதிமன்றில் எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.