இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால், தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்